உச்ச நட்சத்திரமாக திகழும் விஜய் நடிப்பில் சென்ற 11ஆம் தேதி ரிலீசான வாரிசு திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்த திரைப்படம் வெளியான 11 நாட்களில் 250 கோடி வசூல் செய்ததாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ஆரம்பமானது. இந்த படத்தில் விஜய்க்கு 50 வயது தாதா வேடம் எனவும் அவருக்கு வில்லனாக ஆறு முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இதனால் விஜய் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கின்றது.

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் விஜயுடன் சேர்ந்து சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றார்கள். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன்பாகவே பல கோடிக்கு வியாபாரமாகி இருப்பதாக கூறப்படுகின்றது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அண்மையில் லோகேஷ் Thalapathi-67 படத்தின் அறிவிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இத்திரைப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு த்ரிஷா விஜயுடன் இணைந்து நடிக்கின்றார். இதனால் படத்தில் காதல் காட்சிகள் இருக்குமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாவது, கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் என தெரிவித்திருக்கின்றார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்துள்ளது.