துணிவு திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் அஜித் மகிழ்ச்சியில் இருக்கின்றாராம்.

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்ற ஜனவரி 11-ஆம் தேதி துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதே தேதியில் விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆனதால் இரு திரைப்படங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதன்பின் இரண்டு திரைப்படங்களுமே சமமான அளவு விமர்சனங்களை பெற்றது. வாரிசு திரைப்படம் குடும்ப ரசிகர்களின் ஆதரவை பெற்றது. துணிவு திரைப்படம் இளைஞர்களின் ஆதரவை பெற்றது.

வசூலிலும் துணிவு திரைப்படம் அல்லியது. வாரிசு திரைப்படத்துடன் ஒப்பிடும்போது சில கோடிகள் பின்தங்கி இருப்பினும் துணிவு திரைப்படத்தின் வரவேற்பை பார்த்து அஜித் மகிழ்ச்சியில் இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. துணிவு திரைப்படம் மூலமாக ரசிகர்களுக்கு நல்ல கருத்து கூறியதற்கு அவர்கள் அளித்த வரவேற்பு காரணமாக அஜித் மகிழ்ச்சியில் இருக்கின்றாராம்.