வாகனத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது திடீரென நிலை தடுமாறி பாலகிருஷ்ணா விழுந்துள்ளார்.

எம்எல்ஏ-வும் நடிகருமான பாலகிருஷ்ணா தனது சொந்த தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அவர் வாகனத்தில் இருந்து தவறி விழுந்தார். பாலகிருஷ்ணா தனது சொந்த தொகுதியான இந்துப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது வாகனத்தில் நின்றபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் தன்னை வரவேற்ற தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் கைகளை அசைத்துக் கொண்டிருந்தார்.

மெதுவாக சென்று கொண்டிருந்த அவரின் பிரச்சார வாகனத்தை டிரைவர் திடீரென வேகமாக ஓட்டியிருக்கின்றார். அப்போது வாகனத்தின் மீது நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ண திடீரென கீழே விழுந்து இருக்கின்றார். இதனால் உடன் இருந்தவர்கள் பாலகிருஷ்ணாவை எச்சரிக்கையாக தாங்கி பிடித்துக் கொண்டார்கள். அவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. சற்று நேரம் ஓய்வுக்கு பின் அவர் மீண்டும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.