கமல்ஹாசனை சந்தித்தது குறித்து பிரபல இயக்குனர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் வெளியான நேரம், பிரேமம் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவர் உலகநாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்தது குறித்து சோசியல் மீடியாவில் பதிவு ஒன்றை பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எனது வாழ்க்கையில் முதல்முறையாக சினிமாவின் மவுண்ட் எவரெஸ்ட் உலகநாயகன் கமல்ஹாசனை சந்தித்தேன்.

அவரது வாயிலிருந்து சினிமாவுக்கான ஐந்தாறு கதைகளை கேட்டேன். பத்து நிமிடத்திற்குள் எனது புத்தகத்தில் அது பற்றிய சிறு குறிப்புகளை எழுதிக் கொண்டேன். ஒரு மாஸ்டர் என்பதால் அவரது அனுபவங்களை பகிர்ந்தார். ஆனால் ஒரு மாணவனாக அவர் சொல்வதில் ஏதாவது விட்டு விடுவேனா என பயந்தேன். நம்ப முடியாத இந்த கனவான சந்திப்புக்காக இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.