நடிகை சோபனாவை போலவே இருக்கும் இளம் பெண்ணின் வீடியோ வைரல் ஆகிறது. 1990களில் ஷோபனா இருந்தது போலவே அந்த இளம்பெண் இருக்கின்றார். இது அனைவரையும் ஆச்சரியமடையும் செய்ய உள்ளது. அவர் வேறு யாரும் இல்லை. கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தா தான். பாடகியும் நடனம் கலைஞருமான சிவஸ்ரீ தமிழ்நாட்டை சேர்ந்தவராவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் இடையே வரவேற்பை பெற்றவர் ஷோபனா.

இவர் மலையாள திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் 1994-ல் ஷோபனா பாசலின் மணி சித்திரத்தாரில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. 2002 ஆம் வருடம் ஆங்கில திரைப்படத்தில் நடித்ததற்காக தனது இரண்டாவது தேசிய விருதையும் பெற்றார். ஷோபனா இரண்டு தேசிய விருதுகளையும் பல மாநில விருதுகளையும் பெற்று இருக்கின்றார். இந்திய அரசு இவருக்கு 2006 ஆம் வருடம் ஜனவரியில் பத்மஸ்ரீ விருது வழங்கியும் கௌரவித்ததுள்ளது.