தூத்துக்குடி கடற்கரையில் கடல் ஆமை முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெர்மல் நகர் கடற்கரை பகுதியில் ஒரு குழியில் ஆமை முட்டை இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் குழியை பார்வையிட்டனர். அந்த ஒரு குழியில் சுமார் 100 முட்டைகளை ஆமை இட்டிருந்தது. இதனை வனத்துறையினர் தற்போது பாதுகாத்து வருகின்றார்கள்.

தூத்துக்குடி கடல் பகுதியில் ஆமை முட்டையிட்டு இருப்பது அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது. உலகில் இருக்கும் ஏழு வகை கடல் ஆமைகளில் சித்தாமை, அலுங்காமை, பெருந்தலையாமை, பச்சையாமை மற்றும் தோனி ஆமை உள்ளிட்ட ஐந்து வகை ஆமைகள் மன்னார் வளைகுடா பகுதியில் பார்க்கலாம். கடல் ஆமைகள் பொதுவாக டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை முட்டையிடுவதற்காக கடற்கரையை நோக்கி வரும் .அந்த காலம் தான் ஆமைகள் முட்டையிடுவதற்கு ஏற்ற காலம். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி கடல் பகுதியில் ஆமை முட்டையிட்டுள்ளது.