தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம், மாநில அரசின் மருத்துவமனைகளில் லேப் டெக்னீசியன் (Lab Technician) பதவிக்கு மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு தேர்வு எழுத்துத் தேர்வு இல்லாமல், உங்கள் கல்வி சான்றிதழ் மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடி நியமனம் நடைபெறுவதால், அரசு பணி விரும்பும் நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மொத்த காலியிடங்கள்: 60

சம்பளம்: ₹35,400 – ₹1,30,400 வரை

வயது வரம்பு:

OC பிரிவு – 18 முதல் 32 வயது

SC/ST/BC/MBC/DNC – 18 முதல் 57 வயது

கல்வித் தகுதி:
கிங் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிவென்டிவ் மெடிசின் அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 2 வருட DMLT (Diploma in Medical Laboratory Technology) படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களும் தேர்வு செய்யும் அடிப்படைகளாக எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:
SC/SCA/ST/DAP – ₹300

மற்ற எல்லா பிரிவினரும் – ₹600

தேர்வு எதுவும் இல்லை என்பது மிகப்பெரிய நன்மையாகும். ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விண்ணப்ப தொடங்கும் தேதி: 10.07.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.07.2025

விண்ணப்ப இணையதளம்: https://mrb.tn.gov.in

விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதிகள் மற்றும் வழிமுறைகளை உறுதி செய்த பிறகே விண்ணப்பிக்க வேண்டும். இது ஒரு அரிய தமிழ்நாடு அரசுப் பணி வாய்ப்பாக இருப்பதால், அரசு மருத்துவ துறையில் பணியாற்றும் கனவு காணும் நபர்கள் இந்த வாய்ப்பைப் தவறவிடக்கூடாது.