தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம் நேற்று முதல் வருகின்ற 13-ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இது குறித்த விரிவான தகவலை மின்வினியோக செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.

நேற்று திருச்செந்தூர் கூட்டத்தில் சிறப்பு முகமானது தொடங்கப்பட்டது. இந்த நிலையில் 10-ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும் இடங்களை நாள் வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஜனவரி-10 : சன்னதிதெரு, சுண்டங்கோட்டை, தட்டார்மடம் வைரவம், ஆறுமுகநேரி பேயன்விளை, தேரிகுடியிருப்பு, நெடுங்குளம், பழனியப்பபுரம் கருங்கடல், பரமன்குறிச்சி சியோன் நகர், காயல்பட்டினம் சதுக்கை தெரு, சுண்டங்கோட்டை, தட்டார்மடம்குரும்பூர் பள்ளிவாசல் தெரு, சாத்தான்குளம் பெருமாள்சாமி கோவில் தெரு,  நாசரேத் ஜூபிளி தெரு, ஆழ்வார்திருநகரி ஆதிநாதபுரம், உடன்குடி முத்துகிருஷ்ணாபுரம், இடைச்சிவிளை, கொட்டங்காடு, சிறுநாடார் குடியிருப்பு .

நாளை ஜனவரி-11 : ரத வீதி, காயல்பட்டினம் அப்பாபள்ளி தெரு, கேம்பலாபாத், கிருஷ்ணா நகர், ஆறுமுகநேரி எல்.ஆர். நகர், நாலுமாவடி,இலமால்குளம், பழனியப்பபுரம் வீராக்குளம், சிவலூர் காலனி, மேல நடுவக்குறிச்சி, நாசரேத் மர்க்காசிஸ் தெரு, நா.முத்தையாபுரம், மெஞ்ஞானபுரம் ராமசாமிபுரம், சாத்தான்குளம் பஜார் சுற்றுப்பகுதி, உடன்குடி சிவலூர், அன்பின்நகரம், கொம்மடிக்கோட்டை.

நாளை மறுநாள் ஜனவரி-12 : காயாமொழி குருநாதபுரம்,சாத்தான்குளம் வீரகுமார பிள்ளை தெரு, காமராஜர் நகர், வெயிலுகந்தம்மன் கோவில் தெரு, பரமன்குறிச்சி மறவன்விளை, சோமநாதபுரம்,   நொச்சிக்குளம், புளியங்குளம்,பிறைகுடியிருப்பு, காயல்பட்டினம் சிவன் கோவில் தெரு, புன்னக்காயல், குரும்பூர் புறையூர், இடச்சிவிளை, எழில்நகர், வெள்ளரிக்காய்யூரணி, குரங்கனி, நங்கைமொழி, உடன்குடி பண்டாரஞ் செட்டிவிளை, சாதரக்கோன்விளை, ரங்கநாதபுரம், சொக்கன்குடியிருப்பு.

வெள்ளிக்கிழமை ஜனவரி-13 : காயாமொழி பள்ளிவாசல், தெற்கு பேய்குளம், நாசரேத் வைத்தியலிங்கபுரம், கூழையன்குண்டு, காயல்பட்டினம் நைனார்தெரு, குமாரபுரம், சேர்ந்தபூமங்கலம், கூரந்தன்விளை, தட்டார்மடம் அண்ணாநகர், சாத்தான்குளம் தோப்புவனம் ரோடு, செட்டிகுளம்,  திருக்கழூர், மெஞ்ஞானபுரம் வள்ளியம்மாள்புரம், உடன்குடி சந்தடியூர், மாரியம்மாள்புரம்,  படுக்கப்பத்து மறக்குடி தெரு.