மர்ம காய்ச்சலால் பரமத்தி வேலூர் அருகே பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி வேலூர் அருகே இருக்கும் நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ. இந்த தம்பதியினருக்கு தர்ஷன் என்ற மகனும் சிவ தர்ஷினி என்ற மூன்றரை வயதில் பெண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில் சென்ற சில நாட்களாக சிவதர்ஷினி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் பரமத்தி வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள்.

இதன்பின் மேல் சிகிச்சைக்காக கரூரில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவ தர்ஷினி சேர்க்கப்பட்டார். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் பொதுமக்கள் மர்ம காய்ச்சல் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.