திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுத்தொகை எட்டு வரும் போலி பதிவு எண்களைக் கொண்டு இயங்கி வந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் கூட்டுத் தொகையாக எட்டு வரும் போலி பதிவு எண்களை உருவாக்கி இரண்டாம் தர வாகனங்களை விற்பனை செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுதி இருக்கின்றது. இதனால் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நூற்றுக்கணக்கான வாகனங்கள் இதுபோல போலியான பதிவு எண்களுடன் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் தமிழகம் முழுவதும் இருக்கும் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு ஒவ்வொரு ஊர்களிலும் கூட்டுத்தொகை எட்டு வருகின்ற போலி பதிவு எண்களுடன் கார் இயங்குகின்றதா என கண்காணித்து வந்தனர்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மூன்று கார்கள் போலி பதவு எண்களுடன் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின் மூன்று கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு அதனுடைய பதிவு எண்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த மூன்று கார்களும் இடைத்தரகர்கள் மூலமாக வாங்கப்பட்டதாகவும் வாகனங்களின் பதிவு எண்கள் வட்டார போக்குவரத்து அலுவலக கைப்பேசி செயலி இருந்ததால்தான் காரை வாங்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினார்கள்.