துணிவு திரைப்படத்தின் டிரைலர் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார்.

தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது. இத்திரைப்படத்திலிருந்து வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதன்பின் இரண்டாவதாக வெளியான காசேதான் கடவுளடா பாடலுக்கு சுமாரான வரவேற்பே கிடைத்தது. இதன்பின் மூன்றாவது பாடலான கேங்ஸ்டா பாடல் வெளியானது. சீண்டுனா சிரிப்பவன், சுய வழி நடப்பவன் என்ற வரிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த துணிவு படத்தின் டிரைலர் சென்ற டிசம்பர் 31 வெளியானது. நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரைலர் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் முதலிடத்தில் பிடித்திருப்பதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. இதனை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றார்கள்.