மாவீரன் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். இவர் முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவர் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்து விட்டார்.  தற்போது மண்டேலா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கின்றார். இப்படத்தை ஷாந்தி டாக்கீஸ் தயாரிக்கின்றது.

இத்திரைப்படத்திற்கு “மாவீரன்” என தலைப்பு வைக்கப்பட்டிருக்கின்றது. இத்திரைபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடிக்கின்றார். மேலும் இத்திரைப்படத்தில் இயக்குனர் மிஸ்கினும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். யோகி பாபு, நடிகை சரிதா உள்ளிட்டோரும் திரைப்படத்தில் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் பட குழு நேற்று படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.