சமந்தா திரைப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் சமந்தா. இவர் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் சாகுந்தலம் என்னும் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை குணசேகரன் இயக்கியிருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கின்றார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை 3டியில் மாற்ற இருப்பதாகவும் இதற்கு மேலும் சில மாதங்களாகும் என்பதால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் திரைப்படத்தின் புதிய அறிவிப்பை பட குழு வெளியிட்டு இருக்கின்றது. அதன்படி படக்குழு நேற்று புத்தாண்டை முன்னிட்டு நாளை காலை 11 மணிக்கு படத்தின் அறிவிப்பை வெளியிட இருப்பதாக குறிப்பிட்டது. ஆகையால் இன்று காலை 11:00 மணிக்கு சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளது.