கணவர் இறந்த பிறகு மகளின் முதல் பிறந்த நாளில் எடுக்கப்பட்ட போட்டோவை மீனா பகிர்ந்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் முன்னணி நடிகையாக மாறி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் மீனா. இவரின் கணவர் வித்தியாசர் சென்ற ஜூன் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்தார். இவர் சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு மீனா வீட்டிலேயே முடங்கி இருந்தார். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றார்.

இந்த நிலையில் நைனிகா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அப்பா இறந்த பிறகு நைனிகா அம்மாவுடன் மட்டும் கொண்டாடும் பிறந்தநாள் இது. இந்த நிலையில் மீனா தனது மகள் நைனிகாவுக்கு வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்றார். அது கப்பல் தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவாகும்.