பழங்குடியினர் பண்பாட்டு உடற்பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி அருகே இருக்கும் மாவநல்லா அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பாக பழங்குடியினர் பண்பாட்டு உடற்பயிற்சி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் பங்கேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார்கள் பங்கேற்றனர். இதன்பின் இதுபற்றி அதிகாரிகள் கூறியுள்ளதாவது, பழங்குடியினரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த உடற்பயிற்சி கூடத்தை ஆதிவாசி மக்கள் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் பயன்படுத்தலாம். இதன் மூலம் மசினகுடி பகுதி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கு தயாராகும் வகையில் புத்தகங்கள் பண்பாட்டு மையத்தில் இருக்கின்றது. இதனை பயன்படுத்தி தேர்வுகளில் வெற்றி பெறலாம் என தெரிவித்துள்ளார்கள்.