அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டசபையில் 2022-23 ஆம் வருடத்தின் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் சென்ற மே மாதம் நடைபெற்ற போது நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அறிவிப்பை வெளியிட்டார். இதை அடுத்து திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழாவானது நேற்று முன் தினம் நடந்தது.

இந்த விழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக ஆரம்பித்து வைத்தார். இதை அடுத்து திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க முதல்வர் தொடங்கி வைத்தவுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு துணை சபாநாயகரும் ஆட்சியரும் உணவு பரிமாறினார்கள்.