தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சருடைய மருமகன் கட்ட கூடிய வாட்ச் 14 கோடி ரூபாய். அது என்ன ? முதலமைச்சர் இதுவரை பயன்படுத்திய கார் என்ன ? முதல் அமைச்சர் இதற்கு முன்பு இருந்த போது  என்னென்ன வாட்ச் கட்டினாரு ? என்னென்ன பொருள் பயன்படுத்தினார் ? இப்ப என்ன பண்றார் ? கொஞ்சம் நுணுக்கமாகத்தான் இருக்கு. கொஞ்சம் ஆழமாக தான் இருக்கும்.

கொஞ்சம் காரமாக இருக்கும்,  கொஞ்சம் கசப்பாக இருக்கும். ஆனால் தமிழகம் இந்த கேள்வியை கேட்க வேண்டிய நேரத்திற்கு வந்துட்டோம். இரண்டு லட்சம் ரூபாய் கோடி என்பது சாதாரணம் கிடையாது. இரண்டு தலைமுறை வளர்வதற்கான காசு. அதான் ஆரம்பிக்கும்போதே சொன்னேன். இரண்டு தலைமுறையை வளர்த்து எடுக்கக்கூடிய காசு. இன்னைக்கு அன்பில் பொய்யாமொழி எஜுகேஷன் மினிஸ்டர் சொல்றாரு.

எங்களால் பள்ளி கட்டிடத்திற்கு பணம் கொடுக்க முடியவில்லை, காரணம் நூறு ரூபாய் பட்ஜெட் வருதுனா….  93 ரூபாய் சம்பளத்திற்கே போகிறது.  7 ரூபாய் வைத்து நம்ம ஸ்கூலுக்கு என்ன கொடுப்போம் என சொல்லுறாரு ? அதனால் தான் திருப்பூர் போன்ற வளர்ந்த மாநகரத்தில் இருக்கக்கூடிய இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மூன்று அரசு பள்ளிக்கு பெஞ்ச் இல்ல, பிளாக் போர்டு இல்லை.

அதற்கு வந்த பணம் எங்க போயிருக்கு என்று கேட்டீங்கன்னா ? துறைமுகமாக உருமாறி இருக்கிறது, இந்தோனேசியாவில்….  எங்கேயோ ஒரு இடத்தில் கார மாறி இருக்கு. அமைச்சர்களுக்கு இருக்கக்கூடிய இன்ஜினியரிங் காலேஜ் மட்டும் பாத்தீங்கன்னா தல சுத்திடும். இருந்தாலும் நம்ம உங்களை தயார் படுத்துவதற்காக சொல்றோம் என தெரிவித்தார்.