முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் ஜெயிலுக்கு போகும்போது பகவத் கீதை,  ராமாயணம் உள்ளிட்ட மூன்று புத்தகம் கேட்டுள்ளார். இதெல்லாம் படிச்ச அவருடைய செயல்கள் என்னவாக இருக்கும். அவரை ஜெயிலுக்கு அனுப்பியதை பத்தி உங்களுடைய கருத்து என்ன ? என்ற கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

இல்லைங்க அதெல்லாம் வெளிய வந்துட்டு தான் இருக்கு…  நீங்க மீடியாட்ட போட்டுட்டு தான் இருக்கீங்க… அதனால முதல்ல இருந்தே  அவருடைய நிலைப்பாடு அப்படித்தான் இருக்கு.  எட்டு,  ஒன்பது முறை சம்மண் கொடுத்தா கூட நான் போக மாட்டேன்.  நான் பேச்சுக்கு சொல்றேன்… கம்பாரிசன் இல்லைங்க…. அதே தேர்தல் சமயம்…. ஐயா தேர்தல், தேர்தல் என பேசுனீங்களே….  அதே தேர்தல் சமயத்துல தான் மோதி சீப் மினிஸ்ட்டா இருந்தபோது,  சிபிஐ அவர கூப்டாங்க. 

வந்து  கேள்விக்கு பதில் சொல்லுங்க என அழைத்தார்கள். அப்போ மோடி இப்படி  சொல்லல…  என்ன தேர்தல் சமயத்துல இப்படி சொல்றீங்க…  ஜனநாயகத்துக்கு கேடுன்னு சொல்லல….    கூப்பிடுறீங்களா வாரேன்,  வாங்க.  8 மணி நேரம் கேள்வி கேட்டாங்க.  ஒரு பச்சை தண்ணி கூட குடிக்காமல் அவர் பதில் சொன்னாரு. சொல்லிட்டு வெளிய வந்தாரு…  சொன்னாங்க இந்த மாதிரி…. மீடியா கேட்டாங்க….. சிபிஐ கேள்வி கேட்டாங்க,  நான் முழுமையாக பதில் கொடுத்துட்டு வந்திருக்கிறேன்….

அது ஒரு தரம் கூப்பிட்டதுக்கே… இங்க எட்டு தடவை  கூப்பிட்டு, ஒன்பதாவது  முறை கோர்ட்டுக்கு போயி,  அவர் வரவே மாட்டேங்குறார். நாங்க எப்படிங்க நடத்துவது என்று கேட்ட பிறகு,  கோர்ட்டு நீங்க  போய் தான் ஆகணும்னு சொன்ன பிறகு வந்தாரு.. அவர் முதல்ல இருந்தே….   ஒத்துழைப்பு கொடுப்பதற்கான மனநிலையில் இல்லை….    இன்னைக்கு அப்படித்தான் இருக்காரு. இனிமேலும் அப்படித்தான் இருப்பாரோ

பாஜக அருணாச்சலம் பிரதேசத்தை பற்றி ஏன் பேச மாட்டேங்குறாங்க ? என கனிமொழி கேட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,

அருணாச்சலம் பிரதேசத்தை வெளியுறவு துறை அமைச்சர் நேற்றைக்கு  பேசியிருக்கிறார். அதுக்கு முன்னாடி  பிரதமரும் சொல்லியிருக்கிறார். அது இந்தியாவோட பகுதி. யாரு என்ன பெயர் மாற்றிக் கொண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை. அது நம்மளுடைய  பகுதி என சொல்லி இருக்காங்க என தெரிவித்தார்.