தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கானல் நீர் போன்றது. அதை பயன்படுத்த முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல உள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி தற்போது மாநில அடிப்படையில் கொண்டு செல்லப்படும் என வாக்குறுதி அளித்திருப்பது நகைப்புக்குரியது என விமர்சித்துள்ளார்.