புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அடப்பன்வயல் பகுதியில் சர்புதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் புதுக்கோட்டையில் இருந்து பரம்பூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு சம்சா வியாபாரம் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அதே காரில் ரபிக், உபயத்துல்லா, ரஜாக் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில் விசலூர் விளக்கு அருகே சென்றபோது மணி என்பவர் ஓட்டி வந்த கார் சர்புதீன் ஓட்டி சென்ற கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மணி, அவருடன் வந்த தனலட்சுமி, மல்லிகா சர்புதீன் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.