இமாச்சல பிரதேசத்தில் 65 வயதாகும் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய கணவர் இறந்து விட்டதால் தன்னுடைய வீட்டில் தனிமையில் மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் ஜூலை 3 ம் தேதி மதியம் அவரது 25 வயது பேரன் அவருடைய வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மூதாட்டி வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் பேரன், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து மூதாட்டியிடம் “வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி காவல் நிலையத்தில் தனது பேரன் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் மூதாட்டியின் பேரன் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல், அத்துமீறி நுழைதல் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.