தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் எது செய்தாலும் அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பேசப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய 99 நிமிடங்களில் ஒரு மில்லியன் பாலோயர்கள் வந்ததால் உலக அளவில் விரைவாக பாலோயர்களை குவித்த பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய் 3-ம் இடத்தை பிடித்தார். இந்நிலையில் தற்போது 60 லட்சம் பாலோயர்களை நடிகர் விஜய்யின் இன்ஸ்டாகிராம் கணக்கு பெற்றுள்ளது. இதை அவருடைய ரசிகர்கள் #ThalapathyOnINSTAGRAM என்ற ஹேஷ்டேக் மூலம் வைரலாக்கி வருகிறார்கள். மேலும் கூடிய விரைவில் நடிகர் விஜயின் instagram கணக்கில் இன்னும் பாலோயர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.