சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு கால்பதித்தவர் தான் நடிகை வாணி போஜன். இவரது நடிப்பில் சமீபத்தில் செங்கலம் எனும் வெப் சீரிஸ் வெளிவந்தது. அதோடு ஊர் குருவி, பாகைவனுக்கும் அருள்வாய், பாயுமொளி நீ எனக்கு, லவ் உட்பட பல படங்களை அவர் கைவசம் வைத்துள்ளார். ஜி.வி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் சென்ற 2021ல் வெளியான படம் பேச்சிலர். இந்த படத்தில் முதலில் வாணிபோஜன் தான் ஹீரோயினியாக நடிக்க இருந்தாராம்.

எனினும் பேச்சிலர் படத்தில் இடம்பெற்ற சில நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகள் காரணமாக அவர் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டு வெளியேறினாராம். இதுகுறித்து அவர் கூறியதாவது “நான் அந்த படத்தில் நடித்திருந்தால் எனக்காக அப்படத்தில் காட்சிகள் மாறி இருக்கும். எனக்காக எந்தவொரு காட்சியையும் டைரக்டர் மாற்றக் கூடாது. இயக்குனரின் சுதந்திரமும், கிரியேட்டிவிட்டியும் பறிபோகக் கூடாது. ஆகவே நான் அப்படத்தில் நடிக்க வேண்டாம் என முடிவுசெய்தேன்” என கூறியுள்ளார்