டைரக்டர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் உருவாகும் “இராவண கோட்டம்” படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிக்கிறார். கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படத் தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் கவனிக்கிறார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் சிம்பு தன் சமூகவலைதளபக்கத்தில் வெளியிட்டார். தற்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.