தமிழகத்தில் அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டித்து மாண்புமிகு தவெக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 31 முதல் நடைமுறைக்கு வரும் இந்த அறிவிப்பின் மூலம், தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் உடனடியாக வழங்கப்பட உள்ளன.
குறிப்பாக, எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாத ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வசித்து வருபவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் இலவசப் பட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாகப் பல ஆண்டுகளாகச் சொந்த வீடின்றித் தவித்து வந்த ஏழை எளிய மக்கள் சொந்த நிலத்தின் உரிமையாளர்களாக மாற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஆட்சேபனைக்குரிய மற்றும் தடை செய்யப்பட்ட அரசு நிலங்களில் வசிக்கும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குப் பாதுகாப்பான மாற்று இடங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
BREAKING:
The @TVKVijayHQ government has issued an order extending the special regularisation scheme for granting pattas for unobjectionable poramboke (government) lands for another year from August 31.
Eligible beneficiaries will be given free house-site pattas. Those who… pic.twitter.com/15f95BO18O
— Arun Vijay (@AVinthehousee) August 29, 2026
“>
அரசின் இந்த மக்கள் நல அறிவிப்பு ஏழை எளிய மக்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
