மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பேரிடரிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் 28.08.2026 வெள்ளிக்கிழமை அன்று சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பான ஏற்பாடுகளும் அரசால் உடனடியாகச் செய்து கொடுக்கப்பட்டன.
விமான நிலையம் வந்திறங்கிய அந்த சுற்றுலாப் பயணிகளை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி ஆனந்த் அவர்கள் நேரில் சென்று வரவேற்று நலம் விசாரித்தார்.
வெளிநாட்டில் ஆபத்தில் சிக்கிய தமிழர்களைத் தமிழக அரசு உடனடியாகத் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக மீட்டு அழைத்து வந்துள்ளது பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின் படி,
நேற்று (28.08.2026) வெள்ளிக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand MLA அவர்கள், நேபாளத்தில் நிகழ்ந்த பேரிடரிலிருந்து மீட்கப்பட்டு, சென்னை விமான நிலையம் வந்தடைந்த… pic.twitter.com/6PpsZgtXUd
— Office Of Minister N Anand (@OfficeOfNAnand) August 29, 2026
“>
இந்த வரவேற்பு நிகழ்ச்சியின்போது, மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார், சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். விக்னேஷ், துணைச் செயலாளர் திரு. ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலரும் உடனிருந்து பயணிகளுக்குத் தேவையான உதவிகளை ஒருங்கிணைத்தனர்.
