இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம் சிறுவர்களின் மனநிலையையும், குடும்பக் கட்டமைப்பையும் எந்த அளவிற்குப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு அதிர்ச்சியளிக்கும் சான்றாக ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக வேண்டும் என்பதற்காக, 11 வயதே ஆன ஒரு சிறுமி தான் சாப்பிடாமல் பட்டினி இருப்பதாகத் தன் தோழியிடம் மெசேஜில் பொய் கூறியதை அறிந்த தாய், அதற்குத் தண்டனையாக அந்தச் சிறுமிக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று இணையத்தில் கேள்வி கேட்டுள்ளார்.

மகளின் இந்த விபரீதமான போக்கைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், இணையவாசிகளிடம் ஆலோசனை கேட்கப் போய், அதுவே தற்போது சோஷியல் மீடியாவில் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமூக வலைதளங்களில் போலிப் புகழுக்காகவும், மற்றவர்களின் கவனத்தைப் பெறுவதற்காகவும் சிறுவர்கள் எல்லை தாண்டி யோசிக்கத் தொடங்கியிருப்பது பெற்றோர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தான் பட்டினியாக இருப்பதாகத் தனது தோழியிடம் கூறிய சிறுமியின் மெசேஜை ததேச்சையாகப் பார்த்த தாய், பதறியடித்துக் கொண்டு அதற்கான காரணத்தைத் தேடியபோதுதான், அது வெறும் டிக்டாக் வீடியோவிற்கான ‘ட்ரெண்ட்’ என்பது தெரியவந்தது.

உணர்ச்சிகரமான விஷயங்களைப் பொய்யாகச் சித்தரித்து லைக்குகளையும் வியூஸ்களையும் பெற நினைக்கும் இந்த ஆபத்தான மனநிலை, சிறுவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஆனால், இந்த விஷயத்தில் தாயின் அணுகுமுறையும் இணையவாசிகளால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. தன் 11 வயது மகளின் தவறை அன்போடு கண்டித்துச் திருத்துவதற்குப் பதிலாக, அவளுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பொதுவெளியில் இணையவாசிகளிடம் தாய் கேட்ட கேள்வி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிறுவர்களுக்குத் தண்டனை கொடுப்பதை விட, சமூக வலைதளங்களின் ஆபத்துகள் குறித்தும், போலி புகழின் விளைவுகள் குறித்தும் அவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்குவதே பெற்றோர்களின் தலையாயக் கடமை என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.