சிறுகக் கட்டி பெருக வாழ வேண்டும் என்ற நம் முன்னோர்களின் பழமொழியை மெய்ப்பிக்கும் வகையில், இளம் பெண் ஒருவர் 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து உண்டியலில் சேமித்து வந்த நாணயங்களைக் கொண்டு நிலம் வாங்கியுள்ள சம்பவம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துப் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.
இன்றைய நவீன காலத்தில் கையில் பணம் கிடைத்தவுடன் ஆடம்பரமான மொபைல் போன்கள் வாங்குவது அல்லது ஆடம்பர கார்களை வாங்கிப் பெருமைப்பட்டுக்கொள்வது என்ற எண்ணமே பெரும்பாலான இளைஞர்களிடம் மேலோங்கியிருக்கிறது.
ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, தனது எதிர்காலத்தைச் சீரமைக்கும் நோக்கில் இந்த இளம் பெண் மேற்கொண்ட தொலைநோக்குப் பார்வை கொண்ட முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது அன்றாடச் சிறு செலவுகளைக் குறைத்து, சிறுகச் சிறுகச் சேமித்த நாணயங்களை அவர் தனது சேமிப்பு உண்டியலில் சேகரித்து வந்துள்ளார்.
இறுதியில் அந்தச் சேமிப்பு உண்டியலை உடைத்து, அதில் சேர்ந்த ஆயிரக்கணக்கான நாணயங்களை முழுமையாக எண்ணிப் பார்த்துத் தனது கனவான நிலத்தை வாங்குவதற்கான தொகையாகப் பயன்படுத்தியுள்ளார். ஆடம்பரமான பொருட்களின் மதிப்பு காலப்போக்கில் குறைந்துவிடும்.
ஆனால் நிலத்தின் மதிப்பு என்றும் குறையாது என்பதை உணர்ந்து, கார் அல்லது ஆடம்பர போன் வாங்குவதைத் தவிர்த்துச் சொந்தமாக நிலம் வாங்கிய அவரது சாதுரியமான நடவடிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியானது முதலே, அப்பெண்ணின் பொருளாதார முதிர்ச்சியையும் சேமிப்புப் பழக்கத்தையும் பாராட்டிப் லட்சக்கணக்கானோர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் “இன்றைய இளைஞர்களுக்குச் சேமிப்பு மற்றும் முதலீடு குறித்து இந்தப் பெண் ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார்” என்றும், “அவசியமற்ற ஆடம்பரங்களை விட நிலையான சொத்து உருவாக்கமே முக்கியம் என்பதை இந்த இளம் பெண் நிரூபித்துவிட்டார்” என்றும் நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எளிமையான சேமிப்பும் சரியான திட்டமிடலும் இருந்தால் சாமானியராலும் சாதிக்க முடியும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு சிறந்த சான்றாகும்.
See this Instagram video by @djmadgirl https://t.co/h4ubuwaeZt
“>
