பெங்களூரு – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நெரலூர் அருகே சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடிக்கொண்டிருந்த காரின் எஞ்சின் பகுதியில் இருந்து திடீரெனப் புகைந்து தீப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதனைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டுப் பாதுகாப்பாக வெளியேறினார். இதனால் ஓட்டுநருக்கு எத்தகைய காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்த தப்பினார். அருகில் இருந்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தீயை அணைக்க முயன்ற போதிலும், தீ மளமளவென்று பரவி கார் முழுமையாக எரிந்து நாசமானது.

தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆத்திகேபள்ளி காவல் துறையினர் நிலைமையை ஆய்வு செய்தனர்.

“>

 

இந்தத் தீ விபட்டுக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.