நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் இயற்கைச் சீற்றத்தில் சிக்கியவர்களை மீட்க நேபாள ராணுவத்தினர் தீவிரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 570-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசுவா மாவட்டத்தில் உள்ள மேல் திரிசூலி நீர்மின் திட்டச் சுரங்கப்பாதைக்குள் பல தொழிலாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க நேபாள ராணுவ வீரர்கள் அடர்த்தியான சேறு மற்றும் இடிபாடுகளுக்கு நடுவே ஆபத்தான முறையில் ஊர்ந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்ட காட்சி காண்போரைக் கலங்கச் செய்துள்ளது.

நிலப்பரப்புகள் முற்றிலும் நீரிலும் சேற்றிலும் மூழ்கியுள்ளதால், வான்வழி மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ள நீரால் துண்டிக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் சேதமடைந்த வீடுகளின் கூரைகளில் தஞ்சமடைந்த மக்களை ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மிகத் தாழ்வாகப் பறந்து பத்திரமாக மீட்டு வருகின்றனர்.

இந்தப் பேரழிவில் இந்தியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 80-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், எல்லையோரப் பகுதிகளில் இன்னமும் நூற்றுக்கணக்கானோரைத் தொடர்புகொள்ள முடியாமல் அவர்களது உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

NEPAL FLOOD: 350 RESCUED FROM HYDROPOWER TUNNEL

The Nepali Army has rescued 350 people who were trapped inside the Upper Trishuli Hydropower tunnel following the devastating Bhote Koshi flood in Rasuwa.

A total of 883 people have been rescued amid the ongoing flood crisis. pic.twitter.com/9EbJMmS3l3

— Subodh Kumar (@kumarsubodh_) August 27, 2026

“>

தற்போது வரை 14,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் களத்தில் இறக்கப்பட்டு மீட்புப் பணிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதுவரை 3,700-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.