கர்நாடக உணவகம் ஒன்றில் ராகி களி வெறும் கைகளால் பரிமாறப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, சுகாதாரக் குறைபாடு குறித்த பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், உணவக ஊழியர் ஒருவர் சூடான ராகி களியை உருண்டைகளாகப் பிடித்து வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறுகிறார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், உணவைக் கையாளும் போது கையுறைகள் அணியாதது அசுத்தமானது என்றும், இது வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு அழிப்பதாக உள்ளது என்றும் கடுமையாகச் சாடி வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் மற்றொரு தரப்பினர் உணவகத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். ராகி களி மிகவும் சூடாக இருக்கும்.

“>

என்பதால், பிளாஸ்டிக் கையுறைகளைப் பயன்படுத்தினால் அவை உருகி உணவோடு கலக்க வாய்ப்புள்ளதாகவும், கைகளால் உருண்டையாக்குவது தான் அதன் பாரம்பரியமான முறை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். “கையுறைகளை விட சுத்தமாகக் கழுவப்பட்ட கைகளே மேலானது” என்று பதிவிட்டு வரும் அவர்கள், நவீன சுகாதார விதிகள் பாரம்பரிய உணவு தயாரிப்பு முறைகளோடு முரண்படுவதைச் சுட்டிக்காட்டி இந்த விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.