டென்மார்க் நாடு தனது 400 ஆண்டுகால பாரம்பரிய தபால் முறையை 2025-ம் ஆண்டுடன் அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற நவீன சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால், மக்கள் கடிதம் எழுதும் பழக்கத்தை முற்றிலும் மறந்துவிட்டனர். இதனால் தபால் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெருமளவு குறைந்ததைத் தொடர்ந்து, டென்மார்க் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டின் சாலைகளில் பல ஆண்டுகளாகக் காட்சியளித்த தபால் பெட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும், ஆன்லைன் வணிகம் வளர்ந்து வருவதால், பார்சல் டெலிவரி (Parcel Delivery) போன்ற இதர சேவைகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தின் அடையாளமாக இருந்த கடிதப் போக்குவரத்து, டிஜிட்டல் யுகத்தில் மெல்ல மறைந்து வருவதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.
