மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிமுகம் செய்து வைக்கிறார். சென்னை பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலை 200 அடி ரேடியல் சாலையில் இன்று மாலை 5 மணிக்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 20 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 20 பெண் வேட்பாளர்களை ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைக்கிறார்.

தொடர்ந்து இன்றைய தினமே கட்சியின் சின்னத்தையும் அவர் அறிவிப்பார் என்று கூறப்படுகின்றது. நேற்று இந்திய தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியதாக அறிவித்திருந்த நிலையில் வேறு சின்னம் கேட்டிருப்பதாகவும் கட்சியினர் மைக் சின்னத்தை பரப்ப வேண்டாம் என்றும் கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.