தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று இரண்டாவது கட்ட பிரசாரமாக நாகையை தொடர்ந்து திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார்.
தனது உரையில், “தமிழக வெற்றிக் கழகத்தில் பொய் வாக்குறுதிக்கு இடமில்லை. எது நடைமுறைக்கு சாத்தியமோ, எதை உண்மையாக செய்ய முடியுமோ, அதை மட்டுமே வாக்குறுதியாக தருகிறோம்” என வலியுறுத்தினார்.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டை நெல்லை ஏற்றி இறக்க விவசாயிகள் மீது ரூ.40 கமிஷன் வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் தாங்களே கூறியுள்ளதாகவும், ஒரு டன்னுக்கு ரூ.1,000 வரை கேட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, “தெல்டா பகுதியில் 4 ஆண்டுகளாக விவசாயிகளிடம் இருந்து பல கோடி கமிஷன் பறிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சொல்கிறார்கள் என்பதால் நம்புகிறேன்.
வேறு யாரும் சொன்னிருந்தால் நம்பாமல் இருந்திருப்பேன். உங்களுக்கு வேண்டுமென்றால் 40-க்கு 40 என்றால் வெற்றி எனலாம். ஆனால், விவசாயிகளுக்கு அது வயிற்றில் அடித்த கமிஷன் தான். விவசாயிகள் பொய் பேச மாட்டார்கள். இந்த முறைகேடு உங்கள் ஆட்சியில்தான் நடந்தது.
இதற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் உண்டு” என கூறினார். அரசியல் நீதிமுறைக்கு ஏற்றவாறு தவெக செயற்படவுள்ளதாகவும், பொறுப்புணர்வுடன் அரசியல் நடத்தப்போவதாகவும் விஜய் உறுதியளித்தார்.
