உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த சிறுமி ஒருவர் திடீரென நடந்த விபத்தில் 40 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி முடிந்து மாணவி நடந்து சென்று கொண்டிருந்தபோது, வழியில் நின்றிருந்த நாய் ஒன்று அவரைப் பார்த்து திடீரெனக் குரைத்து விரட்டியுள்ளது. இதனால் கடுமையான அச்சமடைந்த அந்தச் சிறுமி, நாயிடம் இருந்து தப்பிக்க வேகமாக ஓடியபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த 40 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.
சிறுமி கிணற்றுக்குள் விழுந்ததை அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் படையினர், எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கினர்.
சாமர்த்தியமாகவும் வேகமாகவும் செயல்பட்ட மீட்புக் குழுவினர், கயிறுகள் மற்றும் உரிய உபகரணங்களைப் பயன்படுத்தி ஆபத்தான முறையில் கிணற்றுக்குள் இறங்கிச் சிறுமியைப் பத்திரமாக மேலே மீட்டு எடுத்தனர். அவர்களின் துரித நடவடிக்கையால் சிறுமியின் உயிர் நல்வாய்ப்பாகக் காப்பாற்றப்பட்டது.
🚨 RESCUE | A schoolgirl in Kaimganj, Farrukhabad, reportedly fell into a 40-foot-deep well after being frightened by a dog while returning home. Rescue workers quickly reached her and successfully pulled her out, saving her life. The dramatic rescue was captured on video. pic.twitter.com/88dWdC9id5 — Ghar Ke Kalesh (@gharkekalesh) August 22, 2026 “>
மிகவும் பரபரப்பாகவும் த்ரில்லிங்காகவும் நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கை முழுவதையும் அங்கிருந்தவர்கள் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய மீட்புக் குழுவினரின் இந்த வீரமான செயலுக்குப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
