தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் லஞ்சம் வாங்குவதற்காகப் புதிய டிஜிட்டல் முறையைக் கையாண்டு வரும் அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வாகன ஓட்டிகளிடம் நேரடியாகப் ரொக்கப் பணமாகப் பெற்றால் சிக்கிக் கொள்வோம் என்ற பயத்தில், அவர்கள் ‘போன்பே’ போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் டிஜிட்டல் முறையில் லஞ்சம் வசூலித்து வருகின்றனர்.
சாலையோரப் பழ வியாபாரிகள், சிறு கடைக்காரர்கள் மற்றும் பான் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள க்யூ ஆர் (QR) கோடுகளைப் பயன்படுத்திப் பணத்தை அனுப்புமாறு போக்குவரத்துப் போலீசார் வாகன ஓட்டிகளை வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. “கையில் ரொக்கப் பணம் வேண்டாம், கடையிலுள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து ஆன்லைனில் போன்பே செய்யுங்கள்” என்று கூறி இந்த லஞ்ச வேட்டையை நடத்தி வருகின்றனர்.
இந்தத் திட்டத்திற்காக உள்ளூர் பழ வியாபாரிகள், பான் கடைகள் மற்றும் சில பெட்ரோல் பங்குகளைப் போக்குவரத்துப் போலீசார் இடைத்தரகர்களாகப் பயன்படுத்தி வருகின்றனர். வாகன ஓட்டிகள் அனுப்பும் பணம் இந்த வியாபாரிகளின் கணக்குகளுக்குச் சென்றடைகிறது. பின்னர், அந்தப் பணத்தை வியாபாரிகளிடம் இருந்து ரொக்கப் பணமாகவோ அல்லது கமிஷன் கழித்துக் கொண்டோ காவல்துறையினர் பெற்றுக் கொள்கின்றனர்.
போலீசாரின் இந்த டிஜிட்டல் லஞ்ச நடவடிக்கையால் தினமும் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், சிறு வியாபாரிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த முறைகேடு குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
క్యాష్ వద్దు.. ఫోన్పే చేయండి పటాన్చెరులో ట్రాఫిక్ పోలీసుల డిజిటల్ లంచాల దందా డైరెక్ట్గా క్యాష్ వద్దు.. పండ్ల వ్యాపారులు, పాన్ డబ్బాల క్యూఆర్ కోడ్కు ‘ఫోన్పే’ చేయండి పాన్ డబ్బాలు, పెట్రోల్ బంకుల ద్వారా కూడా డబ్బులు వసూలు చేస్తున్నారని ఆరోపిస్తున్న స్థానికులు pic.twitter.com/1o4BkmDCYM — Telugu Scribe (@TeluguScribe) August 22, 2026 “>
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி லஞ்சம் வாங்கும் போக்குவரத்துப் போலீசாரின் இந்த டிஜிட்டல் லஞ்ச பந்தயம் குறித்து உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
