மும்பையில் உள்ள புகழ்பெற்ற மிதிபாய் கல்லூரி அருகே, சாலையைக் கடக்க முயன்ற 15 வயது சிறுமி மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். இந்த அதிர்ச்சிச் சம்பவம் ஆகஸ்ட் 22 காலை வேளையில் நடந்துள்ளது.

என்.எஸ். சாலை எண் 1-ல் நடந்த இந்த விபத்தின் வேகத்தில் சிறுமி தூக்கி எறியப்பட்டு சாலையில் விழுந்துள்ளார். விபத்து நடந்த உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுமியை மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமியை மோதிய பிறகு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் வண்டியை நிறுத்தாமல் வேகமாகத் தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்த மக்கள் அவரைத் தடுக்க முயன்றும் பிடிபடாமல் அவர் தப்பித்துவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூஹு காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“>

தப்பிச் சென்ற ஓட்டுநரையும் மோட்டார் சைக்கிளையும் அடையாளம் காணும் பொருட்டு, சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.