தெலுங்கானா, பஞ்சாப், ஆந்திரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கான  தலைவர்களை நியமித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்..

மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ஆந்திர மாநில பாஜக தலைவராக புரந்தேஸ்வரி, ஜார்கண்ட் மாநில பாஜக தலைவராக முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.. பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜாக்கரை நியமித்து பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது..

மத்திய அமைச்சர்கள் சிலருக்கு அவரவர் மாநிலங்களில் கட்சி பொறுப்பு தரப்பட்டுள்ளதால் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளது. கட்சிப் பணிகளுக்கு சென்றவர்களுக்கு மாற்றாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.