உத்தரபிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது ரியா மௌரியா என்ற சிறுமி, ஒரே மாதத்தில் ஆறு முறை பாம்பு கடித்ததால் தற்போது கடும் அவதியிலும், பயத்திலும் சிக்கியுள்ளார்.
கடந்த ஜூலை 22-ஆம் தேதி வயல்லுக்கு சென்றபோது முதன்முறையாக பாம்பு கடித்ததாக அவரது தந்தை ராஜேந்திர மௌரியாகூறினார். உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் குணமடைந்திருந்தாலும், அதில் இருந்து விடுபட்ட சில நாட்களிலேயே மீண்டும் மீண்டும் பாம்பு கடிக்க தொடங்கியுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நான்கு முறை பாம்பு கடித்துள்ளதாகவும், சில சமயங்களில் குளிக்கும் போதும், வீட்டு வேலை செய்கையில் கூட பாம்பு வந்து கடிக்கிறது என்றும் அவரது தந்தை வருத்தத்துடன் கூறுகிறார். தொடர்ச்சியாக கடித்ததனால், ரியா மூன்று முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, இருமுறை மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி அகிலேஷ் சிங் கூறுவதாவது, பாம்பு கடித்ததற்கான அடையாளங்கள் ரியாவின் கால்களில் தெளிவாக இருந்ததாகவும், தேவையான விஷமருந்தும் வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
कौशांबी– सर्पदंश का शिकार हो रही कौशांबी की एक बेटी,एक महीने के अंदर 7 बार काट चुका है सांप ,अकेले रहने पर काटता है काला साँप ,डर के साये में जी रहा है परिवार #highlight #breakingnews2025 #सर्पदंश pic.twitter.com/5ZvZsa9Sg0
— Alok Yadav (@AlokYad79966687) August 31, 2025
“>
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்திருந்தும், வனத்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராமவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஒரே பாம்பு தொடர்ந்து ஒரு சிறுமியை குறிவைத்து கடிப்பது மர்மமாகவும், குடும்பம் தற்போது பயத்தில் வீட்டைவிட்டு இடம்பெயரத் திட்டமிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
कौशांबी में सर्पदंश का बेहद हैरान कर देने वाला मामला। 15 साल की बच्ची को एक माह में 6 बार सांप ने डसा। 30 अगस्त की सुबह नहाते समय फिर सांप ने काटा। परिवार की सारी जमा पूंजी बेटी के इलाज में खर्च। अब आर्थिक तंगी से जूझ रहा राजेंद्र मौर्य का परिवार। इलाज के बजाय झाड़-फूंक का सहारा… pic.twitter.com/BTkB7RnD0H
— Ds Yadav (@dsnetwork18) August 31, 2025
“>
ஒரு குடிசை வீட்டில் வசிக்கும் குடும்பம், மருத்துவச் செலவில் ஏற்கனவே சேமிப்புகளை இழந்துள்ளார் . இச்சம்பவம் தற்போது மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
