இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காக தங்களது உயிரையே பற்றி கவலைகொள்வதில்லை. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மூன்று இளைஞர்கள் ஒரு ரயில்வே பாலத்தின் தண்டவாளத்தில்  நின்று ரீல் எடுக்க முயற்சி செய்கிறார்கள். பாலத்தின் கீழே ஆறு ஓடிக்கொண்டிருக்க, ரயில் வேகமாக நெருங்கும் தருணத்தில், மூவரும் ஒருவருக்குப் பின்  ஒருவர் குதிக்கின்ற காட்சிகள் மிக அதிர்ச்சியாக உள்ளன.

இந்த சம்பவம் எந்த மாநிலத்தில் நடந்தது என்ற விவரம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோவில் இடம் பெற்ற காட்சிகள் யாரையும் பதைபதைக்க  வைக்கும் வகையில் உள்ளது. ரயிலின் வேகம் மிக அதிகமாக இருந்த நிலையில், ஒரு சில விநாடிகள் கூட தாமதமாகியிருந்தால் மூவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தாங்கள் வீடியோ எடுத்து வைரலாவது என்பதற்காக, அந்த ஆபத்தை அவர்களே ஏற்படுத்திக்கொண்டு உள்ளனர்.

“>

 இளைஞர்கள் ரீல் உருவாக்குவதில் கவனம் செலுத்துவது தவறில்லை, ஆனால் அதற்காக தங்கள் உயிரை ஆபத்தில் இட்டுக்கொள்வது தவறு என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற செயல்களுக்கு கட்டுப்பாடு தேவை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.