ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரசு முறை நல்லடக்க நிகழ்வுகளில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த இறுதிச் சடங்கில் இந்திய அரசு சார்பாக முக்கியத் தூதுக்குழு பங்கேற்க உள்ளதாக வெளியுறவாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலக நாடுகளின் ஒட்டுமொத்தக் கவனமும் தற்போது ஈரான் பக்கம் திரும்பியுள்ள இந்தச் சூழலில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா மற்றும் பீகார் ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் ஆகியோர் இந்திய அரசு பிரதிநிதிகளாக ஈரான் செல்லவுள்ளனர் என்ற தகவல் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் உற்றுநோக்களை ஏற்படுத்தியுள்ளது.