சென்னை ஏர்போர்ட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்றும் எதன் பின்னணியில் இவர்கள் இதுபோன்று ராஜினாமா செய்கிறார்கள் என்ற காரணம் தனக்கு தெரியவில்லை என்றும் இதனை வெறும் அதிமுகவின் உட்கட்சி விவகாரமாக மட்டும் நினைத்து கடந்து செல்ல முடியாது என்றும் கூறினார்.

அதன் பிறகு தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு விசிக தந்துள்ளது உறுதியான ஆதரவு என்றும் கண்டிப்பாக 5 வருடம் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாகவும் கூறினார். அதோடு திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் விஜயை முதன் முதலில் சந்தித்த போதே இதற்கான பதிலை தெரிவித்து விட்டதாக கூறிய திருமா கண்டிப்பாக தான் திருச்சி கிழக்கில் போட்டியிட மாட்டேன் என்றார். இது தொடர்பான செய்திகள் அனைத்தும் வெறும் ஊகங்களே என்று தெளிவு படுத்தினார்..