சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள சாலையில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனெனில், அது சாதாரண விநாயகர் இல்லை, அவரது கையில் இருந்து நேராக பக்தர்களுக்கு லட்டு வழங்குகிறார். இணையத்தில் பரவியுள்ள வீடியோ ஒன்றில், பக்தர்கள் முதலில் விநாயகரின் வாகனமான எலிக்கு முதலில் உணவு கொடுக்கிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by Harsh🇮🇳 (@harssshu)

அதற்குப் பிறகு வெறும் சில விநாடிகளிலேயே விநாயகரின் கையிலிருந்து லட்டு சுழன்று வெளிவந்து பக்தருக்கு கிடைக்கிறது. இந்த அதிசய தரிசனத்தை காணும் சிறிய குழந்தைகள் கொண்டாட்டத்தில் மிதந்து வருகின்றனர். ஒரு வீடியோவில், ஒரு சிறுவன் விநாயகர் கையிலிருந்து நேரில் லட்டு வாங்கி மகிழ்ச்சியில் குதித்து ஆடும் காட்சி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. இந்த விதமான உன்னத அனுபவம் குடும்பங்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான தரிசனமாக மாறியுள்ளது.

இந்த “அதிர்ச்சி தரும் அதிசயம்” ஒரு மெக்கானிக்கல் திட்டமிடலின் மூலம் நடந்துள்ளது என்பதே உண்மை. விநாயகருக்கு உள்ளே சிறிய ஸ்டோரேஜ் பகுதியில் லட்டுகள் நிரப்பப்பட்டு, எலிக்கு உணவு கொடுக்கும்போது ஒரு ட்ரிகர் மூலம் விநாயகரின் கையிலுள்ள சிறிய ஓட்டையின் வழியாக லட்டு வெளியே வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், பார்ப்பதற்கு உண்மையிலேயே விநாயகர் பிரசாதம் தருவதாக தோன்றுகிறது. சமூக வலைதளங்களில் #LadduWaleBappa என்கிற ஹாஷ்டேக்கில் இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு மக்கள் மனதில் அந்த மகிழ்ச்சியான தரிசனம் நீடிக்கிறது.