தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாமல்லபுரம் கூட்டத்தில் பேசும்போது, “தலைவர் விஜய் நினைத்தால் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெல்ல முடியும், ஆனால் சட்டப்படி அவர் 3 அல்லது 4 தொகுதிகளில் போட்டியிடுவார்” என்று ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டார். இதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும், அரசியல் தெரிந்தவர்கள் கொஞ்சம் குழப்பமடைந்துள்ளனர்.
ஏனென்றால், இந்திய தேர்தல் விதிகளின்படி (Representation of the People Act, 1951) ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். புஸ்ஸி ஆனந்த் ‘4 தொகுதிகள்’ என்று குறிப்பிட்டது ஒருவேளை உணர்ச்சிவசப்பட்ட பேச்சாக இருக்கலாம் அல்லது சட்ட விதிகள் குறித்த ஒரு சிறு தவறான புரிதலாக இருக்கலாம் எனப் பேசப்படுகிறது.
எப்படியிருந்தாலும், விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவாரா? அல்லது மற்றுமொரு அதிரடி முடிவை எடுப்பாரா? என்பது இன்னும் சஸ்பென்ஸ் தான். 1996-க்கு முன்னாடி எத்தனை தொகுதிகள்ல வேணும்னாலும் நிக்கலாம்ங்கிற விதி இருந்தது, ஆனா இப்போ இருக்கிற சட்டப்படி 2 தான் டார்கெட்! ஆனந்த் அவர்களின் இந்த “4 தொகுதி” முழக்கம், தேர்தல் களத்தில் ஒரு புதிய சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
