உத்தரப்பிரதேசத்தில் ஐஸ் க்ரீம் வியாபாரி ஒருவரிடம் நபர் ஒருவர் துப்பாக்கியைக் கொடுத்து, இந்தா, சுட்டுத் தள்ளு என்று கூறும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அந்த நபர் தனது கைத்துப்பாக்கியை எடுத்து ஐஸ் க்ரீம் விற்பனையாளரிடம் நீட்டுவதும், அதை வாங்கும் வியாபாரி புன்னகையுடன் துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு போஸ் கொடுப்பதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத ஆயுதத்தைக் காட்டி விளையாடிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக இதில் தலையிட்டுள்ளனர்.

“>

இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச காவல்துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி, இந்த வீடியோவில் இருக்கும் நபர்கள் யார் மற்றும் இது எந்தப் பகுதியில் படமாக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களைச் சேகரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலும், ஆயுதச் சட்டத்தை மீறும் வகையிலும் செயல்பட்ட அந்த நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.