உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நஜிபாபாத் பகுதியில், தெருவில் நடந்து சென்ற ஒரு சிறுவனை 7 தெருநாய்கள் கொண்ட கூட்டம் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகல்ஷா பகுதியில் நடந்த இந்த கோரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் அந்த வீடியோவில், தனியாக நடந்து செல்லும் சிறுவனை நோக்கி முதலில் ஒரு நாய் வருகிறது; அடுத்த சில விநாடிகளில் மேலும் பல நாய்கள் ஓடிவந்து அச்சிறுவனைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகக் கடிக்கத் தொடங்குகின்றன.
यूपी: बिजनौर की इस वीडियो को देखकर Dog lover क्या बोलेंगे।
जिले के नजीबाबाद मुग़लुशाह क्षेत्र में आवारा कुत्तों ने एक मासूम बच्चे पर हमला कर दिया, बच्चे की हालत गम्भीर है। pic.twitter.com/KkxnTwjgiX— Shahnawaz(News24) (@Shahnawazreport) June 16, 2026
“>
இதனால் நாய்களின் பிடியில் சிக்கித் தவித்த சிறுவனை, அந்த வழியே சென்ற நபர் ஒருவர் உடனடியாக ஓடிவந்து நாய்களை விரட்டியடித்துக் காப்பாற்றினார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதிகரித்து வரும் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகளும் விவாதங்களும் வலுத்து வருகின்றன.
