பிரபல ஆபாச திரைப்பட நடிகை காக்னி லின் கார்ட்டர் தனது 36 வயதில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த செய்தியை அவரது நண்பர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதில், அவர் திங்களன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இத்தாலி நாட்டிலுள்ள பர்மாவில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இவர், நடனம் மற்றும் பாடலிலும் சிறந்து விளங்கி வந்தார். 2000 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆபாச படங்களில் நடிக்க தொடங்கினார்.