அமெரிக்காவில் மிக்சிகன் உணவகத்தில் மார்க் என்ற வாடிக்கையாளர் ஒருவர் ஊழியர்களுக்கு 10,000 டாலர்கள் வழங்கினார். அவர் சாப்பிட்ட உணவுக்கான பில் 32.43 டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2000 ரூபாய் ஆகும். இந்த நிலையில் பத்தாயிரம் டாலர்கள் அதாவது 8 லட்சம் ரூபாய் அவர் ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு  இறந்து போன தன் நண்பனின் நினைவாக அந்த பணத்தை டிப்ஸ் ஆக கொடுக்கிறேன் என்று பணியாட்களிடம் கூறிவிட்டுச் சென்றார். இது குறித்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.