யு பி ஐ மொபைல் போன் ஆப்ஸ் மூலம் டிஜிட்டல் பேமென்ட்களை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. NPCI ஆல் கண்காணிக்கப்படும் யுபிஐ சேவைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் கிடைக்கின்றன. அதில் இலங்கை, மொரிசியஸ், பிரான்ஸ், சிங்கப்பூர், நேபாளம், பூட்டான் ஆகியவை அடங்கும். யு பி ஐ நேரடியாக வங்கி கணக்குகளை இணைத்து எளிய முறையில் பணப் பரிமாற்றம் செய்ய உதவுகின்றது. கிராமம் முதல் நகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை முக்கிய அங்கம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.