தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாமக மகளிரணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சௌமியா அன்புமணி, தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சட்டமன்றக் கூட்டத்தொடர் மீது பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அதீத ஆர்வம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் அரசியலைக் கவனிக்கும் விதம் மாறியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிகழ்ச்சியின் போது தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், முந்தைய காலங்களை விடத் தற்போது பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு சட்டசபைத் நடவடிக்கைகளைக் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்து வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கு முக்கியக் காரணமாக, முதலமைச்சர் நாற்காலியில் இருக்கும் விஜய்யைக் காண வேண்டும் என்ற ஆர்வம் ஏராளமான மக்களிடம் இருப்பதை அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாகவும் முழுமையாகவும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படாத நிலை மாறி, தற்போது ஆட்சி மற்றும் காட்சிகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இளைஞர்களைப் பொறுத்தவரை இந்த நேரடி ஒளிபரப்புகள் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளன என்றும், இதன் மூலம் மக்கள் தங்களுக்கு உரிய சிறந்த தலைவர்களைத் தாங்களே விழிப்புணர்வுடன் தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

“>

 

அரசியல் களம் மாறியுள்ள விதம் குறித்து சௌமியா அன்புமணி பேசிய இந்த முக்கியக் கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.